இலங்கையில் முதல் முறையாக நாளொன்றில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,000ஐக் கடந்தது

கொவிட்-19 பரவல் ஆரம்பித்த நாள் முதல், நாட்டில் முதல் முறையாக நாளொன்றில் ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றாளர்கள் இன்று  பதிவாகினர்.

இன்று மாலை 574 பேருக்கு தொற்றுறுதியாகி இருந்த நிலையில், சற்று முன்னர் மேலும் 422 பேருக்கு தொற்றுறுதியானது.

இதற்கமைய, இன்றைய தினத்தின் இதுவரையான காலப்பகுதியில் 1,096 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளது.

இதையடுத்து, நாட்டில் தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிககை 103,472 ஆக உயர்வடைந்துள்ளது.

x