தென்னிலங்கையில் திடீரென உயர்ந்த கடல் மட்டம்! வீதிக்கு அடித்துச்செல்லப்பட்ட படகுகள்

காலி – மாத்தறை நெடுஞ்சாலையில் கொக்கல மற்றும் கதலுவ பகுதிகளில் கடல் மட்டம் திடீரென உயர்ந்துள்ளது.

இதனால் கடல் நீர் வீதிகளுக்குள் புகுந்ததுடன், போக்குவரத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த படகுகள் வீதிக்கு அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

இதனால், போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் கடல் மட்டம் குறைந்து நீர் வடிந்தோடியதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.கோப்பு படம்

x