மதுவரி திணைக்களத்தினல் நாளை மதுபான சாலைகளை மூடுமாறு அறிவிப்பு

உலக மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நாளைய தினம் நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபான சாலைகளையும் மூடுமாறு மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது.

மதுவரி திணைக்களத்தினால் விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் 56 மதுவரி திணைக்கள அலுவலகங்களின் கீழ் 900 உத்தியோகத்தர்களை கடமையில் ஈடுபடுத்தி சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் மதுவரி திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.