இன்றைய வானிலை!

நாட்டின் பல பாகங்களிலும் இன்று 27ம்திகதி   மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைதீவு, வவுனியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரத்தில்  மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல் மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும்.

சப்ரகமுவ, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது பொது மக்கள் மிக அவதானமாக இருக்க வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
x