கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொரு நபர் அடையாளம்

நாட்டில் இன்றைய தினத்தின் இதுவரையான காலப்பகுதியில் ஒருவருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

அமெரிக்காவில் இருந்து வந்த ஒருவருக்கே கொவிட்-19 தொற்றுறுதியானதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 383 ஆக உயர்வடைந்துள்ளது.

வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெறுபவர்களின் எண்ணிக்கை 125 ஆக அதிகரித்துள்ளது.