இன்றைய காலநிலை தொடர்பான விபரங்கள்!

நாட்டின் பல பாகங்களிலும் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய மத்திய,சப்ரகமுவ,மேல்,தெற்கு,ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களின் சில பகுதிகளிலும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களின் சில பாகங்களிலும் இவ்வாறு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது பொது மக்கள் மிக அவதானமாக இருக்க வேண்டும் என விளமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

x