கொழும்பில் எதிர்ப்பு பேரணி

20ம் திருத்தசட்டமூலத்திற்கு எதிராக எதிர்வரும் எட்டாம் திகதி கொழும்பில் எதிர்ப்பு பேரணி ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், திருத்தசட்டமூலங்கள் காரணமாக எதிர்கால சந்ததியினரே பாதிக்கப்படுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

அம்பாறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார்.