சாரதிகளின் கவனத்திற்கு பரந்தனிலிருந்து பூநகரிக்கான பாதை மூடப்படவுள்ளது

பரந்தன் முதல் பூநகரி வரையிலான பாதையில் அமைந்துள்ள பாலம் சீர்த்திருத்தப்பணி காரணமாக போக்குவரத்து தடை ஏற்படுத்தப்படவுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 03 ஆம் திகதி முதல் எதிர்வரும் ஒக்டோபர் 05 ஆம் திகதி வரை குறித்த வீதி போக்குவத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.

இதனால் சாரதிகள் குறித்த காலப்பகுதியில் மாற்று வழியினை பயன்படுத்துமாறும் அந்த அதிகார சபை கேட்டுக்கொண்டுள்ளது.