வலம்புரி சங்குகளை விற்பனை செய்ய தயாரான போது நேர்ந்த விபரீதம்

காலி இமதுவ நகரில் வலம்புரி சங்குகளை விற்பனை செய்வதற்கு தயார் நிலையில் வைத்திருந்ததாக தெரிவித்து கைது செய்யப்பட்டுள்ள நால்வரையும் எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த நால்வரும் இன்றைய தினம் காலி பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்த போதே அவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நுவரெலிய மற்றும் இமதுவ ஆகிய பகுதிகளை சேர்ந்த இவர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.