ஹெரோயினுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்

நுகேகொடை – எம்புல்தெனிய மற்றும் தெல்கந்தை ஆகிய பகுதிகளில் 14 லட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோயினுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.