ஐ.நா சபையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் தெரிவித்த விடயம்

இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்கும் பேண்தகு முகாமைத்துவத்திற்கும் இலங்கை அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் உயிர் பல்வகைத்தன்மை மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மத்திய மலை நாடு, சிங்கராஜ மழைக் காடுகள் ஆகிய இரண்டும் யுனெஸ்கோ இயற்கை மரபுரிமைகளின் தாயகமாக திகழ்கிறது.

தனித்துவமான வளம் நிறைந்த உயிர் பல்வகைத்தன்மைக்கு பங்களிப்பு செய்யும் இந்த இயற்கை வளங்களை பாதுகாப்பதற்கும் நிலையாக அதனை முகாமைத்துவம் செய்வதற்கும் இலங்கை மிகுந்த அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.