சுமார் 1600 யாழ்ப்பாண இளைஞர்கள் ராணுவத்தில்

யாழ்ப்பாண மாவட்டத்தில் சுமார் 1600 இளைஞர்கள் கடந்த மூன்று மாதங்களில் ராணுவத்தில் சேர்ந்துள்ளனர் என்று ராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

இன்னும் பிரிவினைவாத கருத்துக்களைக் கொண்ட பல்வேறு தனிநபர்கள் மற்றும் குழுக்கள் அழுத்தம் கொடுத்த வருகின்ற நிலையில், யாழ் மாவட்டத்தினை சேர்ந்த தமிழ் இளைஞர்கள் மற்றும் யுவதிகள் இராணுவத்தில் இணைந்து பயிற்சி பெறுவது நாம் அடைந்த மிக பெரிய வெற்றி என்று நான் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றேன் ” என்று அவர் கூறினார்.

யாழ்ப்பாணத்தின் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் நடைப்பெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாடும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

x