நேற்று பதிவான 4 கொவிட் மரணங்கள் பற்றிய முழுவிபரம்

நாட்டில் மேலும் நான்கு கொவிட் மரணங்கள் நேற்று பதிவாகின.

இதற்கமைய மொத்த மரணங்களின் எண்ணிக்கை 608 ஆக அதிகரித்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன், அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை ஒன்றின் மூலம் இதனைத் தெரிவித்துள்ளது.

பன்னிபிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதுடைய ஆண் ஒருவர், கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் இருந்து முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், கடந்த 12 ஆம் திகதி உயிரிழந்தார்.

கொவிட்-19 தொற்று, சிறுநீரக நோய் மற்றும் ஈரல் நோய் நிலைமை அவரின் மரணத்திற்கான காரணங்களாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லக்கல பகுதியைச் சேர்ந்த 72 வயதுடைய பெண் ஒருவர், வத்துபிட்டிவல ஆதார வைத்தியசாலையில் வைத்து, கொவிட்-19 தொற்றுறுதியானவர் என அடையாளம் காணப்பட்டார்.

இதையடுத்து, மினுவாங்கொடை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், கடந்த 14 ஆம் திகதி அவர் மரணித்தார்.

கொவிட் நியூமோனியா நிலைமையே அவரின் மரணத்திற்கான காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கபுலியத்த பிரதேசத்தைச் சேர்ந்த 78 வயதுடைய ஆண் ஒருவர், மாரஸ்சன மாவட்ட வைத்தியசாலையில் இருந்து கண்டி தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், கடந்த 15ஆம் திகதி உயிரிழந்தார்.

கொவிட் நிமோனியா, இதய நோய், மற்றும் உயர் குருதியழுத்தம் இந்த மரணத்திற்கான காரணங்களாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெனியாய பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய ஆண் ஒருவர், மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் வைத்து கொவிட்-19 தொற்றுறுதியானவர் என அடையாளம் காணப்பட்டார்.

இதனையடுத்து, தேசிய தொற்று நோயியல் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில், கடந்த 14ஆம் திகதி மரணித்தார்.

கொவிட் நியூமோனியா மற்றும் குருதிப் புற்றுநோய் நிலைமையே அவரின் மரணத்திற்கான காரணங்களாக குறிப்பிடப்பட்டுள்ளது.


x