விசேட செய்தி கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள அனைத்து மாணவர்களுக்கும் அனுமதிப்பத்திரம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு வெளியிட்டு விசேட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான அனுமதிப்பத்திரங்களை ஏற்கனவே பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

குறித்த பரீட்சை எதிர்வரும் 11 ஆம் திகதி நாடு முழுவதும் உள்ள 2936 மத்தியஸ்தானங்களில் நடாத்தப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதேபோல், இந்த பரீட்சைக்கு இம்முறை 03 இலட்சத்து 31 ஆயிரத்திற்கும் அதிகளவான மாணவர்கள் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்பட்டுள்ளது.