துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தின் சில சரத்துக்கள் தொடர்பில் உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல்!

அரசாங்கத்தால் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ள துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசிலமைப்புக்கு முரணானது என தீர்ப்பளிக்குமாறு கோரி உயர்நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்ப தொழிற்சங்கவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் பொறியியலாளர் ஜீ.கபில ரேணுக பெரேராவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவின் பிரதிவாதியாக சட்டமா அதிபர் பெயரிடப்பட்டுள்ளார்.

குறித்த சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள சில சரத்துக்களால் நாட்டின் பொருளாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்படக் கூடும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

x