கிரிந்த கனிம மணல் திட்டுகளை விற்பனை செய்ய இடமளிக்கப்படாது

கிரிந்த கடற்கரையில் உள்ள கனிம மணல் திட்டுகளை இந்திய நிறுவனத்திற்கு விற்க எதிர்க்கட்சி அனுமதிக்காது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதியில் இன்று 12ந் திகதி கண்காணிப்பு சுற்றுப்பயணத்தில் பங்கேற்றபோது எதிர்க்கட்சித் தலைவர் இதனை தெரிவித்தார்.

2004 சுனாமி பேரழிவிலிருந்து இந்த மணல் மேடு பல உயிர்களைக் காப்பாற்றியதாக எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் மேலும் கூறுகையில்,

கனிம வளங்களைப் பெறுவதற்காக சுரங்க நடவடிக்கைகளைத் ஆரம்பிக்க ஒரு இந்திய நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

நான் அமைச்சராக பணியாற்றினேன். அப்பொழுது அந்த நிறுவனங்கள் என்னையும் சந்திக்க வந்தன. இது ஒருபோதும் விற்கப்படவில்லை என்று நான் கூற விரும்புகிறேன். விற்பனை செய்யவும் எதிர்ப்பார்க்கவில்லை. இந்த மணல் திட்டை அழிக்க சஜித் பிரேமதாசவோ, எதிர்க்கட்சியோ, ஐக்கிய மக்கள் சக்தியோ ஒருபோதும் இடமளிக்காது என அவர் தெரிவித்தார்.

x