இன்றைய வானிலை…!

மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு, ஊவா, வடமேற்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறு இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

சில இடங்களில் 100 மில்லி மீற்றர் வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழையின்போது ஏற்படும் தற்காலிக வலுவான காற்று மற்றும் மின்னல் போன்றவற்றால் ஏற்படும் பாதிப்புக்களைக் குறைத்துக் கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, போலவத்த, வேதெனிய, வட்டாரம, அம்பகமுவ, திகன, மஹவல, கல்கமுவ, அம்பாறை மற்றும் ஒலுவில் ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக இன்று 08 ம் திகதி நண்பகல் 12.12 மணியளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x