நாட்டின் சில பகுதிகளில் இன்று மழையுடனான வானிலை

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியக்கூறு இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் அநேகமாக சீரான வானிலை நிலவும் என அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலையை எதிர்பார்க்கலாமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு, மல்வானை, கொஸ்கம, சீதாவக்க, மல்தெனிய, ரொசெல்ல, தலவாக்கலை, சீதா எலிய, எட்டம்பிட்டி, பசறை, வரலந்த மற்றும் பலாடி களப்புவ ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.13 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.

x