ஜனாதிபதி இலங்கைக்கும், சீனாவுக்கும் உள்ளா உறவு தொடர்பில் வெளியிட்ட கருத்து

இலங்கைக்கும், சீனாவுக்கும் இடையில் இடம்பெறுவது ஒரு வர்த்தக ரீதியான கொடுக்கல் வாங்கலாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எனினும், சில தரப்பினர் இந்த உறவை சீனாவுக்கு பக்கச்சார்பானதாக வியாக்கியானம் செய்ததாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

நேற்றைய தினம், ஜனாதிபதி மாளிகையில் வைத்து தன்னிடம் நற்சான்றுப் பத்திரங்களை கையளித்த இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நான்கு தூதுவர்களுடனான சந்திப்பின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கை நடுநிலைமையை அடிப்படையாகக் கொண்டதாகும்.

இந்த நாடு வெளிநாட்டு முதலீடுகளுக்கு திறந்ததாகும்.

சீன நிதி உதவியில் ஹம்பாந்தோட்டை துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டதை கடன் வலையில் சிக்கிக்கொள்வதாக சில தரப்பினர் குறிப்பிட்டபோதும், ஹம்பாந்தோட்டை துறைமுகம் பாரிய அபிவிருத்தி ஆற்றல் வளம் கொண்ட திட்டமாகும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

கடந்த அரசாங்கம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு குத்தகைக்கு வழங்கியபோதும், அது பயன்படுத்தப்படுவது வர்த்தக நோக்கத்திற்காக மட்டுமே ஆகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.