கடற்றொழிலாளர்களே மிகுந்த அவதானம் – சற்றுமுன்னர் விடுக்கபட்டுள்ள எச்சரிக்கை…!

வங்கால விரிகுடாவின் வடகிழக்கு கடற்பிராந்தியங்களிலும், வடக்கு அந்தமான் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பிராந்தியங்களிலும் கடற்றொழிலில் ஈடுப்பட வேண்டாமென எச்சரிக்கை விடுக்க்பட்டுள்ளது.

எதிர்வரும் 72 மணித்தியாலங்களுக்கு இவ்வாறு குறித்த கடற்பிராந்தியங்களுக்கு கடற்றொழிலுக்காக பயணிக்க வேண்டாமென குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஏற்கனவே குறித்த கடற்பிராந்தியங்களுக்கு தொழிலுக்கு சென்றுள்ளவர்களை உடனடியாக கரைக்கு திரும்புமாறும் அறிவுறுத்தல் விடுக்க்பட்டுள்ளது.

வங்கால விரிகுடாவின் வடகிழக்கு கடற்பிராந்தியத்திலும், அரபிக்கடலின் வடகிழக்கு கடற்பிராந்தியத்திலும் ஏற்பட்டுள்ள இரண்டு வெவ்வேறு வளிமண்டல தாழமுக்கம் காரணமாக சீரற்ற வானிலை ஏற்படுமென எச்சரிக்கை விடுக்க்பட்டுள்ளது.

மேலும், இந்த நிலைமை எடுத்து வரும் 48 மணித்தியாலங்கில் மேலும் அதிகரிக்க கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

x