கையூட்டலாக பெறப்பட்ட பணத்தை விழுங்கிய காவல்துறை உத்தியோகத்தர் வைத்தியசாலையில் அனுமதி

கையூட்டலாக பெறப்பட்ட 10,000 ரூபா பணத்தை விழுங்கியதற்காக வெலிவேரிய காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வெலிவேரிய நகரத்தில் உணவகம் ஒன்றை நடத்திச் செல்பவரிடமிருந்து கையூட்டல் வாங்கிய சந்தர்ப்பத்தில் குறித்த காவல்துறை உத்தியோகத்தர் கையூட்டல் ஆணையத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அச்சந்தர்ப்பத்தில் கையூட்டலாக பெறப்பட்ட இரண்டு 5,000 ரூபா நோட்டுகளையும் அவர் விழுங்கியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் களுத்துறையை வசிப்பிடமாகக் கொண்டவர் என்பதோடு வெலிவேரிய காவல் நிலையத்தில் பல்வேறு புகார் பிரிவில் கடமையாற்றுபவராவார்.

சந்தேக நபர் கம்பஹா பிரதான நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தியதையடுத்து ஏப்ரல் 8ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

x