கல் எறிந்த இருவர் விளக்கமறியலில்

எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் பிரச்சார கூட்டத்தின் போது கல் எறிந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த நபர்களை ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ரத்மலானையில் நேற்றிரவு (29) இடம்பெற்ற குறித்த மக்கள் சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் மேடையில் உரையாற்றிக் கொண்டிருந்த போது மேடையை நோக்கி இவ்வாறு கல்வீச்சு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதன்போது, கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், தான் எந்த வித சவால்களுக்கும் முகங்கொடுக்க தயார் எனவும், எவருக்கும் அச்சமடையப் போவதில்லை எனவும் தெரிவித்தார்.