சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதியில் கொவிட் தொற்று பரவல் அபாயம்

சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதியில், கொவிட் தொற்று பரவல் அபாயம், அதிகரிக்கக்கூடும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன் காரணமாக, நாடுமுழுவதும் உள்ள வர்த்தக நகரங்களிலும், சனநெரிசல் மிக்க பகுதிகளிலும் எழுமாறாக பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த சங்கத்தின் செயலாளர் மஹேந்ர பாலசூரிய வலியுறுத்தியுள்ளார்.

நோய் அறிகுறிகளை வெளிப்படுத்தாத நோயாளர்கள், குறித்த இடங்களுக்கு செல்வதனால், ஏனையவர்களுக்கும் தொற்று பரவக்கூடிய அபாயம் உள்ளதாகவும் அவர் அச்சம் வெளியிட்டுள்ளார்.

எவ்வாறிருப்பினும், நோய் அறிகுறிகளுடன் கூடிய நோயாளர்களின் எண்ணிக்கையில் ஓரளவு வீழ்ச்சித் தன்மை உள்ளதாக அதிகாரிகளின் மூலம் கிடைக்கும் தகவல்களில் அறியக்கூடியதாக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

x