தொடருந்து பணியாளர்கள் நேற்று நள்ளிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கைகளில்

பல கோரிக்கைகளை முன்னிறுத்தி தொடருந்து சாரதிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் நேற்று நள்ளிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

தொடருந்து இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடங்கொட எமது செய்தி பிரிவுக்கு இதனைத் தெரிவித்தார்.

அத்துடன் தொழிற்சங்கத்திற்கும் தொடருந்து பொது முகாமையாளர்களுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்தமையை அடுத்து இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இன்றைய தினம் சில அலுவலக தொடருந்துகள் மாத்திரம் சேவையில் ஈடுபடுவதாக தொடருந்து கட்டுப்பாட்டு மையத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

x