இலங்கையில் மேலும் 155 பேருக்கு கொரோனா

இலங்கையில் மேலும் 155 பேருக்கு கொரோனா வைரஸ் கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 86,194 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இன்றைய தினம் மேலும் 240 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 82,753 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கொரோனா தொற்றாளர்கள் 2,934பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 507. பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

x