கருப்பு ஞாயிறு தின நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன

ஏப்ரல் 21 தாக்குதலில் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதி கோரி கத்தோலிக்க மக்கள் அனுஷ்ட்டிக்கும் கருப்பு ஞாயிறு நிகழ்வு ஆரம்பமாகியுள்ளது.

கருப்பு நிற ஆடை அணிந்து இன்றைய ஞாயிறு ஆராதனைகளில் கத்தோலிக்க மக்கள் கலந்துக்கொண்டுள்ளதாக எமது செய்தி தொடர்பாளர்கள் தெரிவித்தனர்.

ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடையோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இன்றைய தினத்தினை கருப்பு ஞாயிறாக அனுஷ்ட்டிக்குமாறு கொழும்பு பேராயர் இல்லத்தினால் அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்தது.

x