நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை

நாட்டில் தற்சமயம் நிலவி வரும் காலநிலையில் நாளை முதல் மாற்றம் ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டின் பல பாகங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி,கிழக்கு,ஊவா,மத்திய மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களின் சில பகுதிகளிலும் காலி,மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாகாணங்களின் சில பகுதிகளிலும் இவ்வாறு இடியுடன் கூடிய மழை பொழிய கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

x