தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் 400 பேருக்கு PCR பரிசோதனை

பொகவந்தலாவ சீனாகலை பூசாரி தோட்டப்பகுதியில் 400 பேருக்கு பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளபட்டு அதன் மாதிரிகள் நுவரெலியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேற்று 25ந் திகதி மாலை இந்த பி.சீ.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொகவந்தலாவ சீனாகலை பூசாரி தோட்டப்பகுதியில் மாத்திரம் இதுவரையில் 16 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணபட்டுள்ளதோடு ஒரு உயிரிழப்பும் இடம்பெற்றுள்ளதாக பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

இதனால் குறித்த பகுதி நேற்று முதல் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

x