நாட்டின் இன்றைய வானிலை

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், மத்திய மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபரகமுவ மாகாணத்திலும் களுத்துறை, காலி, மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களிலும் 50 மி.மீ வரை மழை வீழ்ச்சி பதிவாகக் கூடுமென்றும் அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய, சபரகமுவ, ஊவா மற்றும் மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் மூடுபனி நிலை காணப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக ஏற்படக்கூடிய பலத்த காற்று மற்றும்  மின்னல் தாக்கம் போன்ற ஆபத்துக்களைக் குறைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

x