தெமட்டகொடை மற்றும் வனாத்தமுல்ல பகுதி வாழ் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி

கொரோனா தொற்றாளர்கள் அதிகளவில் பதிவாகியுள்ள கொழும்பு மாநகர சபை பிரதேசத்திற்கு உட்பட்ட தெமட்டகொடை மற்றும் வனாத்தமுல்ல ஆகிய பகுதிகளில் வாழும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் இன்று 16 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

இதனடிப்படையில் இன்றைய நாளில் 1,028 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதான மருத்துவ அதிகாரி ருவன் விஜேமுனி தெரிவித்துள்ளார்.

x