சூரிய சக்தி மின்நிலையங்களை அமைப்பதற்காக சீனா நிறுவனங்களுக்கு வழங்கும் தீர்மானத்திற்கு எதிர்ப்பு

வட மாகாணத்தில் உள்ள மூன்று தீவுகளில் சூரிய சக்தி மின்நிலையங்களை அமைப்பதற்காக சீனா நிறுவனங்களுக்கு வழங்கும் தீர்மானத்திற்கு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் எதிர்ப்பு வெளியிட்டிருந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் கட்சிகள் யாழ்ப்பாணத்தில் ஒன்று கூடியிருந்தனர்.

அதன் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே சி.வி. விக்னேஸ்வரன் இந்த எதிர்ப்பை வெளியிட்டிருந்தார்.

வட மாகாணத்தின் நெடுந்தீவு, அனலைத்தீவு மற்றும் நயினாதீவு ஆகியவற்றில் சூரிய சக்தி மின்னிலையங்களை அமைப்பதற்காக சீன நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த தீர்மானம் எமக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

எனவே இந்த தீர்மானத்திற்கு கண்டனம் வெளியிடுவதாக சி.வி. விக்னேஸ்வரன் கூறியிருந்தமை குறிப்பித்தக்கது.

x