போலி ஆவணங்கள் ஊடாக இறக்குமதி செய்யப்பட்ட டைல்களை பறிமுதல் செய்யுமாறு அமைச்சர் விமல் அறிவுறுத்தல்!

உள்நாட்டு வர்த்தகர் ஒருவர் மூலப்பொருட்கள் என்ற போர்வையில், போலி ஆவணங்கள் மூலம் வெளிநாட்டிலிருந்து ஒரு தொகை டைல்களை இறக்குமதி செய்துள்ளதாகவும், அவற்றை உடனடியாக சுங்கத்தினர் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச அறிவுறுத்தியுள்ளார்.

உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கும் நோக்கில் அரசாங்கத்தினால் டைல்ஸ் இறக்குமதி நிறுத்தப்பட்டிருக்கும் பின்னணியில், இவ்வாறு போலி ஆவணங்கள் மூலம் இவ்வாறு இந்த டைல்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

அதற்கமைய, கைத்தொழில் அமைச்சின் விடுக்கப்பட்ட அழைப்புக்கமைய, குறித்த நிறுவனத்தை பிரதிநிதித்துவப்படுத்தி வருகைத்திருந்த அதிகாரி ஒருவரை அமைச்சர் விமல் வீரவன்ச கடுமையாக சாடிய அதேவேளை, இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

x