யாழ். மேயர் மணிவண்ணனுக்கு எதிராக வழக்கு!

யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி.மணிவண்ணனுக்கு எதிராக மன்னார் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவை மீறி பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான ஆர்ப்பாட்ட பேரணியில் பங்கேற்றமைக்காக மன்னார் காவற்துறையினரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இன்றைய தினம் பதில் நீதவான் கடமையில் இருந்த நிலையில், மனு மீதான விசாரணை எதிர்வரும் ஏப்ரல் 19 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

x