மருத்துவ சிகிச்சை மையங்களில் உள்ள பணிக்குழாமினருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பம்.!

பொதுமக்களுடன் நெருங்கிய தொடர்புடையதாக சேவையை வழங்கும் சிறு மருத்துவ சிகிச்சை மையங்களில் உள்ள பணிக்குழாமினருக்கு ஒக்ஸ்போர்ட் எஸ்ட்ரசெனிக்கா தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இந்த தடுப்பூசி செலுத்தும் பணிகளை எதிர்வரும் புதன்கிழமை முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் 19 கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் அமல் ஹர்சடி சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் தற்போது தனியார் வைத்தியசாலைகளின் சுகாதார பணிக்குழாமினருக்கு ஒக்ஸ்போர்ட் எஸ்ட்ரசெனிக்கா தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

x