இந்தத் தேசிய இணைப்புக் குழுக்கள் அந்தந்தத் துறைகள் தொடர்பான அமைச்சுக்களுடன் இணைந்து தீர்மானங்களை மேற்கொள்வது வினைத்திறனாக அமையுமெனவும் செயலணியின் தலைவர் சுட்டிக்காட்டினார்.
கொள்கை ரீதியாக தீர்மானம் மேற்கொள்ளும் போது அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்களுக்கிடையிலான இணைப்பு வலுப்பெறும். ஜனாதிபதியின் கிராமத்துடன் கலந்துரையாடல் வேலைத்திட்டத்தை மேலும் வலுப்படுத்துவதற்கான கொள்கைக்கமைய, ஐந்து தேசிய இணைப்புக்கள் ஸ்தாபிக்கப்படவுள்ளன.
பிரதேச இணைப்புக்குழுக்களுக்கு மேலதிகாக 5 உபகுழுக்கள் நியமிக்கப்படவுள்ளன. இதன் போது, விவசாயக் குழுவின் தலைமைத்துவத்தை அமைச்சர் சமல் ராஜபக்ஷ வகிப்பார். வாழ்க்கைச் செலவு உப குழுவின் தலைவராக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா செயற்படுவார். அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உட்கட்டமைப்பு வசதிகள் உபகுழுவின் தலைவராகவும் செயற்படுவார்.
சமூக உட்கட்டமைப்பு வசதிகள் உப குழுவின் தலைவராக அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் நியமிக்கப்படவுள்ளார். பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் சமூக அபிவிருத்திக் குழுவின் தலைவராக அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் செயற்படுவார். இந்த உபகுழுக்கள் மாதாந்தம் ஒன்றுகூடிக் கலந்துரையாடும்.