வயல் காணி ஒன்றில் இருந்து கைக்குண்டு மீட்பு

திருகோணமலை – வான் எல ஆயிலியடி பகுதியில் கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளதாகக் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

கிண்ணியா பொலிஸ் நிலையத்திற்கு நேற்று 12ந் திகதி மாலை கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து அக்கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வயல் காணி ஒன்றில் இருந்து இந்த கைக்குண்டு மீட்கப்பட்டதாகவும், இக் கைக்குண்டு துருப்பிடித்த நிலையில் உள்ளதாகவும் இதனை வெடிக்க வைப்பதற்காக திருகோணமலை நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற உள்ளதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

x