அரசாங்கத்தை விட்டு வெளியேற யாருக்கும் சக்தி இல்லை

நாட்டை அழிவு பாதையில் தள்ளிவிட்டு பொதுஜன பெரமுனவை பாதுகாக்கும் முயற்சி நடந்தால், அது அரசியல் அறிவு இல்லாத கட்சிகளின் முட்டாள் தனமான செயல் என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

பொது கூட்டணியில் உள்ள ஏனைய கட்சிகளின் தலைவர்கள் குறித்து பொதுஜன பெரமுனவின் சில உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துக்கள் எந்த அரசியல் அறிவும் இல்லாமல் கூறப்பட்டவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் கட்சிகளுக்கு இடையில் எத்தனை சிக்கல்கள் வந்தாலும், எந்தவொரு தரப்பினருக்கும் அரசாங்கத்தை விட்டு வெளியேறுவதற்கான சக்தி இல்லை என மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

x