மீண்டும் கம்பஹாவில் கொவிட் பரவல் அதிகரிக்கிறதா..?

நாட்டில் நேற்று கொவிட்-19 தொற்றுறுதியான 940 பேரில் கம்பஹா மாவட்டத்திலேயே அதிகமானோருக்கு தொற்றுறுதியாகியுள்ளது.

கொவிட்-19 பரவல் தடுப்பு தேசிய செயற்பாட்டு மையம் விடுத்துள்ள நாளாந்த அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய கம்பஹா மாவட்டத்தில் நேற்றைய தினம் 278 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளது.

அத்துடன் கொழும்பு மாவட்டத்தில் 261 பேருக்கு நேற்று தொற்றுறுதியானது.

இதேவேளை, கண்டி மாவட்டத்தில் 88 பேருக்கும் களுத்துறை மாவட்டத்தில் 71 பேருக்கும் தொற்றுறுதியாகியுள்ளது.

அத்துடன் குருணாகல் மாவட்டத்தில் 51 பேருக்கும், காலியில் 47 பேருக்கும், இரத்தினப்புரியில் 29 பேருக்கும், மாத்தறையில் 25 பேருக்கும், மாத்தளையில் 18 பேருக்கும் தொற்றுறுதியாகியுள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் நேற்று 14 பேருக்கு தொற்றுறுதியானதாக கொவிட்-19 பரவல் தடுப்பு தேசிய செயற்பாட்டு மையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதுளை, அநுராதபுரம், ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் நேற்றைய தினம் தலா 5 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

இதற்கமைய இன்று காலை வரையில் மினுவாங்கொடை, பேலியகொடை மற்றும் சிறைச்சாலை கொத்தணிகளுடன் தொடர்புடைய 70,055 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

அவர்களில் 65,590 பேர் குணமடைந்துள்ளனர்.

இலங்கையில் இதுவரையில் 74 ,055 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளதோடு அவர்களில் 66,983 பேர் குணமடைந்துள்ளனர்.

இதுதவிர நேற்றைய தினம் கொவிட்-19 தொற்றிலிருந்து 773 பேர் குணமடைந்துள்ளனர்.

x