அங்கொட லொக்காவின் தாய் மற்றும் சகோதரியிடம் DNA பரிசோதனை

மத்துமகே லசந்த சந்தன பெரேரா எனும் அங்கொட லொக்காவின் தாய் மற்றும் சகோதரியை இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி DNA பரிசோதனைக்காக இரத்த மாதிரி பெற்றுக் கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இரத்த மாதிரி ஊடாக பெறப்படும் DNA வை இந்தியாவிற்கு அனுப்பி வைக்கவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அதனூடாக அங்கொட லொக்காவின் மரணத்தை உறுதி செய்ய முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

x