மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் தவறியுள்ளதாக எதிர்கட்சி தலைவர் குற்றச்சாட்டு…!

மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் தவறியுள்ளதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம் சுமத்தியுள்ளார்.

பொரளை பகுதியில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

கிராமிய மக்களை போன்று நகரப்பகுதியிலுள்ள மக்களும் தற்போது பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளனர்.

ஏற்றுக்கொள்ள முடியாத அளவு பொருட்களுக்கான விலை அதிகரித்துள்ளது.

கொவிட்-19 காரணமாக புதிய பிரச்சினைகளும் உருவாகியுள்ளன.

எனினும் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தற்போதைய அரசாங்கத்திடம் எந்தவொரு வேலைத்திட்டமும் இல்லை என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

x