பிரித்தானியாவில் அடையாளம் காணப்பட்ட வீரியம்மிக்க புதிய கொரோனா வைரஸ் இலங்கையில்…!

பிரித்தானியாவில் பரவும் டீ.1.1.7 என்ற வீரியம்மிக்க உரு திரிபடைந்த புதிய கொரோனா வைரஸ், நாட்டில் நான்கு பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளது.

கொழும்பு, வவுனியா, அவிசாவளை, பியகம முதலான பகுதிகளில் பெறப்பட்ட மாதிரிகளில் இந்த வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

உரு திரிபடைந்த புதிய கொரோனா வைரஸ், தற்போதுவரை 50 நாடுகளில் பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வைரஸால், நோயாளர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரிப்பதை, அந்த வைரஸ் பரவியுள்ள நாடுகளில் அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

புதிய வைரஸ், உலகம் முழுவதும் புதிய கொரோனா அலையை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக பிரித்தானிய வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

x