வங்காளதேசத்திற்கு எதிரான 2-வது டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் முதல்நாளில் 223/5

வங்காளதேசம் – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் டாக்காவில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடினர். கிரேக் பிராத்வைட் 47 ரன்களும், ஜான் கேம்ப்பெல் 36 ரன்களும் அடித்தனர்.
அடுத்து வந்த மோஸ்லே 7 ரன்னிலும், கைல் மேயர்ஸ் 5 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். போனர் அரைசதம் அடித்தார். அவர் முதல் நாள் ஆட்டம் முடியும் வரை ஆட்டமிழக்காமல் இருக்க வெஸ்ட் இண்டீஸ் முதல் நாள்  ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்கள் எடுத்துள்ளது. ஜெர்மைன் பிளாக்வுட் 28 ரன்னில் ஆட்டமிழக்க விக்கெட் கீப்பர் சில்வா 22 ரன்னுடன் களத்தில் உள்ளார்.
வங்காளதேச அணி சார்பில் அபு ஜாயத், தைஜுல் இஸ்லாம் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
x