சென்னை சூப்பர் கிங்ஸ் ; 13 பேருக்கு கொரோனா

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பந்துவீச்சாளர் ஒருவர் உட்பட குழு அங்கத்தவர்கள் அடங்களாக 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உலகளாவிய கொரோனா தொற்று பாதிப்பால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஐ.பி.எல் 13 ஆவது தொடர் எதிர்வரும் செப்டம்பர் 19 ஆம் திகதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது.

குறித்த போட்டிகள் டுபாய், அபுதாபி, ஷார்ஜாவில் உள்ள மைதானங்களில் நடைபெறுகின்றன.

இதற்காக அனைத்து அணி வீரர்களும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்ல ஆரம்பித்துள்ளனர்.

அந்தவகையில் சென்னையில் கடந்த 5 நாட்களாக பயிற்சி பெற்று வந்த தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர், கடந்த 21 ஆம் திகதி தனி விமானம் மூலம் டுபாய் புறப்பட்டு சென்றனர்.

இந்நிலையிலேயே ஐ.பி.எல். போட்டிகளில் பங்கேற்க டுபாய் சென்றுள்ள நிலையிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்து வீச்சாளர் உட்பட குறித்த அணியின் குழு அங்கத்தவர்கள் உள்ளடங்களாக 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.