2021 ஐபிஎல் ஏலம்… மும்பை இந்தியன்ஸ் போடும் பக்கா பிளான்! யாரை குறிவைத்துள்ளனர் தெரியுமா?

ஐபிஎல் தொடரில் கலக்கி வரும் மும்பை இந்தியன்ஸ் அணி, இந்த முறையும் சரியான பக்கா பிளானுடன் ஏலத்தில் குதிக்கவுள்ளது.

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் ஏலம், வரும் பிப்ரவரி மாதம் 18-ஆம் திகதி நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்காக அனைத்து அணிகளும் தங்கள் அணியில் இருந்து நீக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை அறிவித்தது. அதில் மும்பை இந்தியன்ஸ் அணி யாரும் எதிர்பார்க்காத வகையில், மலிங்கா, நாதன் கோல்டர் நைல், பாட்டின்சன், மிட்செல் மெக்கிளெனகன், செர்பேன் ரூதர்போர்டு, பிரின்ஸ் பல்வந்த் ராய், திக்விஜய் தேஷ்முக் என ஆறு வேகப் பந்துவீச்சாளர்கள் மற்றும் ஒரு சுழற் பந்துவீச்சாளர் வெளியேற்றப்படுவதாக அறிவித்தது.

இதன் மூலம் ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பிளான் என்ன என்பது கிட்டத்தட்ட தெரிந்துவிட்டது.

2021 ஐபிஎல் ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சாளர்களை தான் அதிக அளவில் குறி வைக்கப் போகிறது. நிச்சயம் இரண்டு அனுபவம் கொண்ட வேகப் பந்துவீச்சாளர்கள் மற்றும் இரண்டு சுழற் பந்துவீச்சாளர்களை ஏலத்தில் வாங்க மும்பை இந்தியன்ஸ் திட்டமிடும் என்று முன்னணி வீரர்கள் பலரும் கூறி வருகின்றனர்,

ஏனெனில் மும்பை இந்தியன்ஸ் அணி வலுவான ஒரு பேட்டிங் ஆர்டரை கொண்டது, பந்து வீச்சில் பும்ரா மற்றும் டிரண்ட் போல்ட் இருக்கின்றனர், இன்னும் இரண்டு அனுபவம் வாய்ந்த நல்ல திறமையான பந்து வீச்சாளரை எடுத்துவிட்டால், மும்பை அணி பவுலிங்கிலும் பலம் பெற்றுவிடும்.

இதனால் மும்பை இந்தியன்ஸ் நன்றாக பிளான் செய்து திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.

x