டெஸ்டில் அதிகமுறை 5 விக்கெட்: மெக்ரத்தை முந்திய ஆண்டர்சன்

டெஸ்டில் அதிக முறை 5 விக்கெட் எடுத்த 2-வது வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை ஆண்டர்சன் படைத்துள்ளார்.

இலங்கை-இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி கிரிக்கெட் டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இலங்கை அணி முதல் இன்னிங்சில் 381 ஓட்டங்கள் குவித்தது. மேத்யூஸ் 110 ஓட்டங்களும், டிக்வெலா 92 ஓட்டங்களும் எடுத்தனர்.

இங்கிலாந்து வேகப்பந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 40 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து 6 விக்கெட் கைப்பற்றினார். மார்க் வுட்டுக்கு 3 விக்கெட் கிடைத்தது.

157-வது டெஸ்டில் விளையாடும் ஆண்டர்சன் 30-வது முறையாக 5 விக்கெட்டுக்கு மேல் எடுத்துள்ளார்.

இதன் மூலம் டெஸ்டில் அதிக முறை 5 விக்கெட் எடுத்த 2-வது வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை ஆண்டர்சன் படைத்தார்.

அவர் அவுஸ்திரேலியாவை சேர்ந்த மெக்ராத்தை முந்தினார். மெக்ராத் 29 முறை 5 விக்கெட்டுக்கு மேல் கைப்பற்றி உள்ளார். நியூசிலாந்து வேகப்பந்து வீரர் ரிச்சர்டு ஹேட்லி 36 முறை 5 விக்கெட்டுக்கு மேல் எடுத்து முதல் இடத்தில் உள்ளார்.

ஒட்டுமொத்தத்தில் டெஸ்டில் அதிக முறை 5 விக்கெட்டுக்கு மேல் எடுத்த 6-வது வீரர் ஆண்டர்சன் ஆவார்.

ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு மேல் எடுத்த டாப் 6 வீரர்கள் வரிசை:

1.முத்தையா முரளிதரன் (இலங்கை) -67 முறை (132 டெஸ்ட்).
2.ஷேன் வார்னே (அவுஸ்திரேலியா)- 37 (145).
3.ரிச்சர்டு ஹேட்லி (நியூசிலாந்து)- 36 (86).
4.கும்ப்ளே (இந்தியா) 35- (132).
5.ஹெராத் (இலங்கை)-34 (93).
6.ஆண்டர்சன் (இங்கிலாந்து)- 30 (157)

x