இலங்கை அணி வீரரின் பெண் அதிகாரியுடனான நடத்தை தொடர்பில் SLC யின் விளக்கம்.

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் வீரர் ஒருவர், அணியின் பெண் சுகாதார அதிகாரியுடன் தவறாக முறையில் நடந்து கொண்டுள்ளதாக ஊடகங்களின் ஊடாக வௌியாகும் செய்திகள் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

ஊடகங்களில் தெரிவிக்கப்படும் செய்தி தொடர்பான உண்மைத்தன்மையை விளக்கப்படுத்தும் விதமாக அறிக்கை ஒன்றை சமர்பிக்குமாறு அணியின் முகாமையாளர் அசந்த த மெல்லிற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவருடைய அறிக்கை கிடைக்கப்பட்ட பின்னர் தேவை ஏற்படின் அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ள கிரிக்கெட் வீரர் எதிர்வரும் இங்கிலாந்து அணியுடனான போட்டியில் விளையாட உள்ளவர் என தெரிவிக்கப்படுகின்றது.

x