கேட்ச்களை தவற விட்டதால் விரக்தியின் உச்சிக்கே சென்ற பும்ரா

ஆஸ்திரேலியா- இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. அடிலெய்டு, மெல்போர்ன் டெஸ்ட் போட்டிக்கான ஆடுகளம் போன்று சிட்னி ஆடுகளம் களம் இல்லை. அந்த இரண்டு ஆடுகளங்களும் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தது.

ஆனால் சிட்னி ஆடுகளம் முற்றிலும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருந்தது. இதனால் பும்ரா, நாதன் லயன், அஸ்வின் விக்கெட்டுகள் வீழ்த்த திணறினர். குட் அண்டு லெந்தில் தொடர்ச்சியாக பந்து பிட்ச் செய்து, பேட்ஸ்மேன்கள் தவறு செய்தால் மட்டுமே விக்கெட் கிடைக்கும் நிலைக்கு பந்து வீச்சாளர்கள் தள்ளப்பட்டனர்.

முதல் இன்னிங்சில் இந்தியா 94 ரன்கள் பின்தங்கியிருந்தது. இதனால் 2-வது இன்னிங்சில் ஆஸ்திரேலியாவை குறைந்த ரன்னிற்குள் சுருட்ட வேண்டும் என்ற குறிக்கோளுடன் பும்ரா களம் இறங்கினார். ஆடுகளம் ஒத்துழைக்காததால் பும்ரா கடுமையாக போராடினார்.

ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன் லாபஸ்சேனுக்கு லெக் சைடில் பந்து வீசினார். அவர் அடித்த பந்து ஹனுமா விஹாரியை நோக்கி சென்றது. பிடிக்கக்கூடிய கேட்சை விஹாரி தவறவிட்டார். அதன்பின் டிம் பெய்ன் முதல் ஸ்லிப்பில் கொடுத்த கேட்சை ரோகித் சர்மா தவறவிட்டார்.
பும்ரா
விக்கெட்டிற்கு வாய்ப்பே இல்லாத ஆடுகளத்தில் முழு முயற்சியுடன் பந்து வீசியும் கேட்சை தவற விடுகிறார்களே? என்ற விரக்தி பும்ராவிற்கு ஏற்பட்டது.
பொதுவாக கேட்ச்கள் விடப்பட்டால் எளிதாக எடுத்துக்கொள்வார். ஆனால் இந்த போட்டியில் அவரால் அப்படி செய்ய முடியாமல் போனது. அதை தனது முகத்தின் மூலம் வெளிப்படுத்தினார்.

 

x