உலகத்திலேயே அதிக கேட்ச்களை விட்டவர் ரிஷப் பண்ட்தான்

ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் சிட்னியில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் அறிமுக வீரரான புகோவ்ஸ்கி அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 62 ரன்னில் வீழ்ந்தார்.

புகோவ்ஸ்கி முன்னதாகவே அவுட் ஆகியிருக்கனும். அவர் கொடுத்த இரண்டு எளிதான கேட்ச்களை ரிஷப் பண்ட் பிடிக்க தவறினார். இதனால் 3 ஓவருக்குள் 26, 32 ஆகிய ரன்களில் தப்பினார்.

ரிஷப் பண்ட் அறிமுகம் ஆன காலத்தில் இருந்து பார்த்தீர்கள் என்றால் உலகத்திலேயே மற்ற விக்கெட் கீப்பர்களை விட அதிக கேட்ச்களை விட்ட விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்-ஆகத்தான் இருப்பார் என ரிக்கி பாண்டிங் விமர்சனம் செய்துள்ளார்.

ரிஷப் பண்ட் குறித்து ரிக்கி பாண்டிங் கூறுகையில் ‘‘இன்று ஒருவருக்கே இரண்டு கேட்ச்களை பிடிக்க தவறினார். அவற்றை பிடித்திருக்க வேண்டும். பேட்ஸ்மேனுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் புகோவ்ஸ்கி சதம் அல்லது இரட்டை சதம் அடிக்காமல் ஆட்டமிழந்தது ரிஷப் பண்ட்-க்கு அதிர்ஷ்டம். ஆடுகளத்தின் மேற்பரப்பு நம்பமுடியாத வகையில் இருக்கிறது.

ரிஷப் பண்ட்
கேட்ச்களை தவற விட்டபோது, இன்றைக்கு புகோவ்ஸ்லி அபாரமாக ஆடப்போகிறார். விட்டதற்கு தண்டனை தரப்போகிறார் என்று ரிஷப் பண்ட் நினைத்திருக்கனும். ஆனால் புகோவ்ஸ்கி இன்று 62 ரன்னில் ஆட்டமிழந்துவிட்டார்.
ரிஷப் பண்ட் அறிமுகம் ஆன காலத்தில் இருந்து பார்த்தீர்கள் என்றால், மற்ற விக்கெட் கீப்பர்களை விட அதிக கேட்ச்களை விட்டிருப்பார். அவரது விக்கெட் கீப்பர் பயிற்சியில் ஹோம்ஒர்க் பெற வேண்டும் ’’ என்றார்.
x