முதல் இன்னிங்ஸ் நிறைவில் தென்னாபிரிக்கா அணி முன்னிலையில்

இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது இடம்பெற்று வருகின்றது.

போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து களமிறங்கியது.

அதனப்படையில் இலங்கை அணி தனது முதலாவது இன்னிங்ஸ்ஸில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 157 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்ப்பில் குசல் ஜனித 60 ஓட்டங்களையும் வனிது ஹசரங்க 29 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டிருந்தனர்.

பந்து வீச்சில் தென்னாபிரிக்கா அணியின் வீரரான அன்ரிச் நொக்கியா 6 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி சகல விக்கெட்களையும் இழந்து 302 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளது.

துடுப்பாட்டத்தில் தென்னாபிரிக்கா அணி சார்ப்பில் டீன் எல்கர் 127 ஓட்டங்களையும் வான் டெர் டஸ்ஸன் 67 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்ப்பில் விஷ்வ பெர்ணான்டோ 5 விக்கெட்களையும், அசித பெர்ணான்டோ மற்றும் தசுன் சானக தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தியிருந்தனர்.

அதனடிப்படையில் முதல் இன்னிங்ஸ் நிறைவில் தென்னாபிரிக்கா அணி இலங்கை அணியை விட 145 ஓட்டங்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது.

x