இந்திய வீரர்கள் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை

சிட்னி டெஸ்ட் போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய வீரர்கள் மற்றும் அணி நிர்வாகிகளுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் யாருக்கும் தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ரோகித் சர்மா, ஷுப்மன் கில், பிரித்வி ஷா, நவ்தீப் சைனி, ரிஷப் பண்ட் ஆகியோர் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறியதாக புகார் எழுந்தது. இதையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான 3வது டெஸ்ட் போட்டி சிட்னியில் 7ம் தேதி தொடங்குகிறது. இதற்காக இன்று மெல்போர்னில் இருந்து இரு அணி வீரர்களும் சிட்னி செல்கிறார்கள்.

இதற்கிடையே, இந்திய அணியில் தனிமைப்படுத்தப்பட்ட 5 வீரர்கள் உள்ளிட்ட அனைத்து வீரர்கள் மற்றும் அணி நிர்வாகிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை. இதனால், வீரர்கள் 3-வது டெஸ்டில் பங்கேற்பதில் எந்த சிக்கலும் இல்லை.

x